பிரான்ஸில் பொருளாதார மந்தநிலை – மக்ரோனின் ஆட்சிக்கு பின்னடைவு
பிரான்ஸ் பொருளாதார ரீதியாக மந்த நிலைக்குள் நுழைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு காலாண்டுகளாக எதிர்மறையான உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையான வளர்ச்சியை காட்டிய நிலையில தற்போது மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
INSEE நேற்று வெளியிட்ட கருத்து கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய 2026-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பிரான்ஸின் பொருளாதாரம் 0.2 சதவீதம் சுருங்கியுள்ளது.
இரண்டாவது காலாண்டு புள்ளிவிவரங்களும் ஒரு சிறிய சரிவைக் காட்டும் வகையில் திருத்தப்பட்டுள்ளன.
ஏற்றுமதி சரிவு, பலவீனமான வணிக முதலீடு மற்றும் தொடர்ச்சியான பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் இந்த மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த கணிப்பு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கியுள்ள மக்ரோனுக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.




