ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் தயார் நிலையில்: விரைவில் பேச்சு!
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் தயார் நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புதிய இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் ‘ஹார்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படுவது இணக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
” சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் இதர நாடுகளின் தலைவர்களுடன் “அமைதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்” (Memorandum of Understanding) குறித்து “மிகவும் நல்ல முறையில் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளேன்.” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஒப்பந்தத்தின் இறுதி அம்சங்கள் மற்றும் விவரங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன, அவை விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தாம் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலும் “மிகவும் சிறப்பாக அமைந்தது” டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.




