ஒரே இரவில் 1200இற்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவிய உக்ரைன் – 09 பேர் காயம்
உக்ரைன் ஏவிய 1,246 ளில்லா விமானங்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை நோக்கி 400-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன, அவற்றில் 123 விமானங்கள் நகருக்கு மிக அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம் கிளிமோவோ கிராமத்தில் ஏவப்பட்ட ஆளில்லா விமானம் பேருந்தின்மீது விழுந்ததில் 09 பேர் காயமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இரவுநேர தாக்குதலில் பெரும்பாலான ட்ரோன்கள் தொழிற்சாலைகளை குறிவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




