பொழுதுபோக்கு

துபாயும் இல்ல.. மலேசியாவும் இல்ல.. சென்னை மக்களே தயாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

vijay

இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்ற நிலையில் தற்போது முழு வீச்சில் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேநேரம் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தென் மாவட்டங்களில் நடத்த முடிவு செய்திருந்தனர்.

அதன்பிறகு துபாயில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி மலேசியாவிற்கு மாற்றப்பட்டது.

அதனால் வேகமாக நடைபெற்ற வந்த நிலையில் தற்போது சென்னையிலேயே நடத்தி விடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதன்படி வரும் அக்டோபர் வரும் 5-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக ஆடியோ விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content