Consent Preferences
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

குழந்தைகளைக் கட்டிப்போட்டு துன்புறுத்திய காப்பகம்: இந்தோனேசியாவில் பயங்கரம்

இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா நகரில் இயங்கிய குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பில், அந்த நிலையத்தை நடத்தும் அறக்கட்டளையின் தலைவருக்கு நீதிமன்றம் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா நகரில் இயங்கிய குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பில், அந்த நிலையத்தை நடத்தும் அறக்கட்டளையின் தலைவருக்கு நீதிமன்றம் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

லிட்டில் அரேஷா (Little Aresha) என்ற குழந்தைகள் காப்பகத்தை நடத்தும் அறக்கட்டளையின் தலைவரான டியாஹ் குசுமாஸ்துதி (Diyah Kusumastuti) என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (26) தீர்ப்பளித்த யோக்யகார்த்தா நீதிமன்றம், உரிய அனுமதியின்றி குழந்தைகள் காப்பகத்தை நடத்துதல், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கு வழிவகுத்த அலட்சியம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவரைக் குற்றவாளியாகக் கண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் குறித்த காப்பகத்தில் பொலிஸார் சோதனை நடத்தியபோது, இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் டியாஹ்வுக்கு 900 மில்லியன் இந்தோனேசிய ரூபியா அபராதமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீடாக சுமார் 200 மில்லியன் ரூபியாவைச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காப்பகத்தின் தலைமை ஆசிரியருக்கு ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய 11 பராமரிப்பாளர்களுக்கும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது குறித்து டியாஹ்வின் சட்டத்தரணிகள் பரிசீலித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி