Consent Preferences
அரசியல் இலங்கை செய்தி

சர்வாதிகாரத்தை நோக்கி என்பிபி அரசு: இலங்கை எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

நாட்டில் தனிக் கட்சி ஆட்சியைக் கொண்டு வந்து, சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது என்று என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டில் தனிக் கட்சி ஆட்சியைக் கொண்டு வந்து, சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது என்று என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டம் என்பவற்றையே தற்போது கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டங்களும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டங்களும் அவசியம் என்றாலும் இந்த இரண்டு சட்டங்களிலும் ஜனநாயகத்தை ஒடுக்கும், மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும், மனித உரிமைகளைக் காட்டிக் கொடுக்கும், ஜனநாயகத்தைக் குப்பைத் தொட்டியில் போடும் பல பிரிவுகளை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” கொள்கை அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமையினால், மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை கட்டுப்படுத்தவே இவர்கள் இவ்வாறு அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வருகின்றனர்.

மக்களின் பேச்சு, கருத்து வெளிப்பாடு மற்றும் அரசியலில் ஈடுபடும் உரிமைகளைப் பறிக்கும் வகையில், அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே இத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்து, அரசை பயங்கரவாதத்திலிருந்து அல்லாமல் அரசாங்கத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் சட்டத்தையே கொண்டு வந்துள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டம் எனப் பொய் கூறி மக்களை ஏமாற்றி, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பெலவத்தையிலிருந்து கூறப்படும் பொய்களை மறைக்க, நாட்டில் தனிக் கட்சி ஆட்சியைக் கொண்டு வந்து, சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை