ஐரோப்பா

பிரித்தானியாவில் பணியாற்ற தீவிர ஆர்வம் காட்டும் வெளிநாட்டு தொழிலாளர்கள்!

uk bordr agency

பிரித்தானியாவில் பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தை விட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நாட்டை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற உதவியது என indeed தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்மடு பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற மறுசீரமைப்பிற்குப் பிறகு சர்வதேச விண்ணப்பதாரர்களிடமிருந்து பிரித்தானிய வேலை ஆர்வம் அதிகரித்துள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரித்தானியாவுக்கு வெளியே உள்ளவர்களிடமிருந்து Indeed இணையதளத்தில் பிரித்தானிய வேலைப் பட்டியல்களின் பார்வைகள் 142% உயர்ந்துள்ளன.

மேலும் குறைந்தபட்சம் 2017 இல் இருந்து எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகமாக உள்ளதென indeed குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய புள்ளி அடிப்படையிலான குடியேற்ற முறையை அறிமுகப்படுத்தியது.

இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ளவர்கள் பிரித்தானியாவில் வேலை செய்வதை திறம்பட எளிதாக்கியுள்ளது.

புள்ளிகள் அடிப்படையிலான அமைப்பு, ஆங்கிலம் பேசுவது மற்றும் வேலை வாய்ப்பைப் பெறுவது போன்ற குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் நபர்களுக்கு மதிப்பெண்களை வழங்குகிறது.

முனைவர் பட்டம் பெற்றிருத்தல், அதிக சம்பளம் பெறுதல் அல்லது பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள துறையில் வேலை எடுப்பது போன்றவற்றால் விண்ணப்பதாரர் கூடுதல் புள்ளிகளைப் பெறலாம். விசாவிற்கு தகுதி பெற மக்கள் 70 மதிப்பெண்களை எட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்