Consent Preferences
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து தாக்குதல்: பின்னணியில் ஈரான்?

ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் ஈரானுக்காகச் செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசாங்கம் பயங்கரவாத நிதியுதவித் தடைகளை விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் ஈரானுக்காகச் செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசாங்கம் பயங்கரவாத நிதியுதவித் தடைகளை விதித்துள்ளது.

சோஹைர் ஹசிப் மற்றும் காசெம் ஹமாத் ஆகிய இருவரும் ஈரானின் சார்பில் செயற்பட்டு, 2024ஆம் ஆண்டு சிட்னியில் உள்ள கோஷர் உணவகம் மற்றும் மெல்பேர்னில் உள்ள அடாஸ் இஸ்ரேல் யூத வழிபாட்டுத் தலம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல்களை ஒருங்கிணைத்ததாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.

குறித்த தடைகள் மூலம் இருவரினதும் நிதி அணுகல் கட்டுப்படுத்தப்படுவதுடன், ஆட்சேர்ப்பு, தாக்குதல்களைத் திட்டமிடுதல் மற்றும் அவற்றை முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருப்பதாக ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து ஈரானியத் தூதுவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டதுடன், தெஹ்ரானிலுள்ள தனது தூதரகத்தின் செயற்பாடுகளையும் இடைநிறுத்தியது.

மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாகவும் ஆஸ்திரேலியா அறிவித்தது. எனினும், தம்மீதான குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி