Consent Preferences
இலங்கை

பொலிஸாருக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் – 65,000 அதிகாரிகள் விண்ணப்பம்

காவல் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 65,000 அதிகாரிகள் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர், இதனை வெளிப்படுத்தினார்.

இதற்காக செலவிடப்படும் வரிப் பணத்தை காவல்துறை திணைக்களத்தின் வெகுமதி நிதியிலிருந்து ஏற்கும் என்றும் குறிப்பட்டார்.

மேலும் தெரிவித்த அவர். காவல் அதிகாரிகளுக்கு உரிய மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக வட்டியில்லா கடன்களை வழங்க பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.

அதற்கான உரிய நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர்,   மின்சார மோட்டார் சைக்கிள்களை மிகக் குறுகிய காலத்திற்குள்   அதிகாரிகளுக்கு வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்