G-20 மாநாட்டில் புட்டின் கலந்துகொள்வாரா? ட்ரம்ப் பதில்
புளோரிடாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் விரும்பினால் வரலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அவர் வர விரும்பினால், நிச்சயமாக வரலாம். டிசம்பர் 14-15 ஆம் திகதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் புடின் கலந்துகொள்வதை சிலர் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் அவர் விரும்பினால் நிச்சயம் வரலாம். புட்டின் கலந்துகொள்ள விரும்புவாரா என்பது எனக்கும் சந்தேகம் தான் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.




