பொழுதுபோக்கு

சூரி நடித்த “விடுதலை” படைத்துள்ள மகத்தான சாதனை

கடந்த 2023 மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “விடுதலை பாகம் 1” சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்து வெளியானது “விடுதலை பாகம் 1” திரைப்படம்.

இப்படம் திரையரங்குகளில் பார்வையாளர்களிடம் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து ஏப்ரல் 28, 2023, ZEE5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராகவும்  இப்படம் வெளியானது. சமூகத்திற்கு அவசியமான கருத்துக்களைக் கூறும் படைப்பாக இது அமைந்துள்ளமையால் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெற்றிமாறன். அந்த வகையில் அவரது புதிய திரைப்படமான ‘விடுதலை பாகம் 1’ சமூகத்திற்கு அவசியமான படைப்பாகவும், ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாகவும் அமைந்துள்ளது.

இதுவரையிலும் காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி முதன்முறையாக, மாறுபட்ட தோற்றத்தில் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

படத்தின் முக்கியமான பாத்திரத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி, செங்களம், ஒரு கோடை மர்டர் மிஸ்டரி மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் என அனைத்து வெளியீடுகளும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, வெற்றிபெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது விடுதலை பாகம் 1 திரைப்படமும் இணைந்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content