அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாகும் வெனிசுலா – ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படம்!
வெனிசுலாவை அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கும் வரைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வரைப்படத்தில் அமெரிக்கக் கொடியும், ’51வது மாநிலம்’ என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளன.
தனது நாடு அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறுவதை ஒருபோதும் கருத்தில்கொள்ளவில்லை என தற்போதைய ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் ( Delcy Rodriguez) கூறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதற்கிடையே வெனிசுலாவின் எதிர்க்கட்சி தேர்தல்களை நடத்தக் கோரியுள்ளது. , மே 1 அன்று புதிய தேர்தலுக்கான வாய்ப்புகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ரோட்ரிக்ஸ் தனக்குத் “தெரியாது” என்றும், அது “எப்போதாவது” நடக்கும் என்றும் கூறியிருந்தார்.
இதேவேளை முன்னதாக கருத்து வெளியிட்டிருந்த ட்ரம்ப் வெனிசுலாவை தனது 51 ஆவது மாநிலமாக மாற்றுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




