உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 09 பேர் படுகொலை, பலர் காயம்!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள சந்தையொன்றில்  நேற்று  ரிக்ஷாவில் பொறுத்தப்பட்டிருந்த குண்டொன்று வெடித்து சிதறியதில் சுமார் 09 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளுர் காவல்துறை தெரிவித்துள்ளது.ஷ

ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இப்பகுதியில் வன்முறை அதிகரித்து வருவதற்கான சமீபத்திய அறிகுறியாக இது அமைந்துள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மர்வத் என்ற மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் காவல்துறைத் தலைவர் அஸ்மத் உல்லா (Azmat Ullah) தெரிவித்துள்ளார்.

இந்தக் குண்டுவெடிப்புக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, ஆனால் தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய தாலிபான்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கத்திலிருந்து தனித்து இயங்கினாலும், அதனுடன் கூட்டணி வைத்துள்ளதுடன், சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானிய பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!