ஐரோப்பா

ஸ்பெயினில் வீட்டு வசதி நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு – ஆணை நிறைவேற்றம்

ஸ்பெயினில் வீட்டு வசதி திட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பயனாக முக்கிய ஆணை ஒன்று இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பதவியில் நீடிக்கும் 69 தற்காலிக உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் இந்த ஆணையை நிறைவேற்றியுள்ளது.

இதன்படி குறித்த ஆணையில் வாடகைக் கட்டுப்பாடுகள், தற்காலிக வெளியேற்றத் தடை மற்றும் பெருநிறுவனங்கள் குடியிருப்புச் சொத்துக்களை வாங்குவதற்கான வரம்புகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை வாடகைதாரர்கள் சங்கங்கள் கோரிய, வாடகை ஒப்பந்தங்களைத் தானாகவே புதுப்பிக்கக் கோரும் மற்றொரு நடவடிக்கையையும் இந்த நிலைக்குழு ஒரு வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்துள்ளது.

அதிகரித்து வரும் வீட்டு விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இடதுசாரி அரசாங்கம் கொண்டுவந்த இந்த நடவடிக்கைகள், அக்டோபர் மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வ அரசு அரசிதழில் வெளியிடப்பட்டபோது தற்காலிகமாக அமலுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்