பொழுதுபோக்கு

வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஜோடி! நிஜ ஜோடிகளாகிறார்களா…வைரலாகிறது புகைப்படங்கள் !!!

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முடிவடைந்தது.

இவர்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வளலைதளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

காதல் திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் சிலர், உண்மையிலேயே காதல் வலைக்குள் சிக்கி, திருமண பந்தத்திலும் இணைந்து வாழ துவங்கி விடுகிறார்கள்.

அந்த காலத்து சாவித்திரி – ஜெமினி கணேசனின் துவங்கி, இந்த காலத்தில் பிரசன்னா – சினேகா , சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி, என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நட்சத்திர ஜோடிகள் லிஸ்டில் புதிதாக இவர்களும் இணைய உள்ளனர் .

சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து வந்த வாரிசு நடிகரான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஜோடி.கடந்த சில வருடங்களாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காதலித்து வந்தனர்.

Varun Tej And Lavanya Tripathi's Engagement And Marriage Date; Check ...

கடந்த வாரம், தங்களின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து அதிகார பூர்வமாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து, வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் குடும்பத்தினர் முன்னிலையில், வெள்ளிக்கிழமை (நேற்று) இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Varun Tej And Lavanya Tripathi's Engagement And Marriage Date; Check ...

வருண் தேஜ் ஆறடி உயரத்தில்… வெள்ளை நிற ஜிப்பா அணிந்துள்ளார். லாவண்யா திரிபாதி பச்சை நிற சேலையில், எலகென்ட் அழகில் தன்னுடைய அழகால் பார்ப்பவர்கள் மனதை மயக்குகிறார்.

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி ஆகியோர் மிஸ்டர் , ராயப்பிரி போன்ற படங்களில் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும், மிஸ்டர் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றிருந்த போது இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க துவங்கியதாக கூறப்படுகிறது.

வருண், லாவண்யா திருமணத்தை டெஸ்டினேஷன் திருமணமாக நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Varun Tej Konidela and Lavanya Tripathi are now engaged! See FIRST ...

வருணும், லாவண்யாவும், இவர்கள் காதல் மலர்ந்த இடமான இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது.

விரைவில் வருண் லாவண்யா திருமணம் குறித்த முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content