ஐரோப்பா

காதலியை கொன்று சுவற்றில் புதைத்த காதலன்- 9 ஆண்டுகளின் பின் வெளிவந்த உண்மை!

ஸ்பெயின் நாட்டில் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் வைத்து சுவரில் புதைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

22 வயது பெண் காணாமல் போன நிலையில் அந்நாட்டு பொலிஸார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு சுவர்களுக்கு இடையில் இறந்த உடலின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.சிபோரா காக்னி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அப் பெண் தனது காதலனுடன் பிரிந்த சிறிது நேரத்திலேயே திடீரென காணாமல் போயுள்ளார்.

பொலிஸார் காணாமல் போன இளம் பெண்ணை தீவிரமாக தேடிய நிலையில் அதை பற்றிய தகவல்கள் கிடைக்க பெறாததால் பொலிஸார் விசாரணையை நிறுத்தியிருந்தனர்.இந்நிலையில் மற்றொரு பெண் பவுலா கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட குற்றவாளி காணாமல் போன பெண் சிபோராவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மார்கோ ஜியோ ரோமியோ என்ற 45 வயதுடைய நபரே இக் கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் சிபோராவின் படத்தைப் பார்த்து குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.

காதலியின் உடலில் ஆசிட் ஊற்றியதாக கொலையாளியான காதலன் தெரிவித்துள்ளார்.28 வயது இத்தாலிய பெண்ணான பவுலாவை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மார்க் பவுலாவை 17 முறை குத்தி கொன்றதாக கூறப்படுகிறது.சிபோராவின் உடலை துண்டு துண்டாக வெட்டி அமிலத்தை ஊற்றிய பின் அதை ஒரு பெட்டியில் வைத்து சுவர்களுக்கு இடையே மறைத்து வைத்ததாக மார்க் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்