கதாநாயகியாக களமிறங்கும் வனிதாவின் மகள்!
வனிதாவின் மகள் ஜோவிகா நடித்திருக்கும் முதல் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் ஜோவிகா, எனது முதல் திரைப்படம். அதுவும் தெலுங்கில் MS Raju அவர்களுடன் நேரடியாகப் பணியாற்றுவது, நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் போற்றும் ஒரு அனுபவமாகும்.
குறிப்பாக, ‘தேவி’, ‘வர்ஷம்’, ‘ஒக்கடு’ இன்னும் பல படங்களை தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பப் பார்த்து வளர்ந்தவள் நான், எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன்.
என்னை நீங்கள் நம்பி, என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் ஜோவிகாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.






