லெபனானில் போர் நிறுத்தம்: ஈரான் வரவேற்பு!
இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தத்தை ஈரான் வரவேற்றுள்ளது.
எனினும், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த முயற்சி இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் அவநம்பிக்கை காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம், ஏவுகணை சோதனைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





