ஐரோப்பா

பிரான்சில் இரத்த வங்கிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்

பிரான்சில் உள்ள மூன்று இரத்த வங்கிகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குளிர்சாதன அறைகளைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்புகளைப் பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல் சம்பவத்தால் சேமிப்பில் இருந்த இரத்த இருப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள EFS செய்தித் தொடர்பாளர் சார்லி டுபாய்ஸ் Charley Dubois,  “இரத்தம் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம் என்பதால், எங்கள் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.

சிக்கல்கள் குறித்த எச்சரிக்கைகள் கிடைத்தவுடன், அவர்கள் இரத்தத்தை இணையத்துடன் இணைக்கப்படாத பிற குளிர்சாதனப் பெட்டிகளுக்கு மாற்றினர்” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை , ஸ்வீடன் முதல் பெல்ஜியம் வரையிலான நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளிலும் ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்