இந்தியா செய்தி

இந்திய அரசியலில் மீண்டும் கொந்தளிப்பு: தொடரும் போராட்டம்

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்திய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து 3-வது நாளாக வியாழக்கிழமை (08) போராட்டத்தில் ஈடுபட்டன.

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்திய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து 3-வது நாளாக வியாழக்கிழமை (08)
போராட்டத்தில் ஈடுபட்டன.

எதிர்க்கட்சிகள், அவற்றின் மாணவர் அமைப்புகள் மற்றும் Cockroach இளைஞர் இயக்கம் ஆகியவை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் (Gyanesh Kumar) ராஜினாமாவை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்காளர் பட்டியலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்துள்ளதாக அவை குற்றஞ்சாட்டுகின்றன.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து ஞானேஷ் குமார் எவ்விதக் கருத்தும் தெரிவிக்காத போதிலும், தேர்தல் ஆணையமும் ஆளும் பாஜகவும் இக்குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளன.

பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தின் பாதியில் உருவாகியுள்ள இந்த அரசியல் சவால், தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்த போராட்டங்களைத் தொடர்ந்து மீண்டும் சூடுபிடித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்தியதையும், பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) சார்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதையும் செய்தி நிறுவனமான ANI வெளியிட்டுள்ள காணொளிகள் காட்டுகின்றன.

அதேவேளை, தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் ‘CJP’ இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைகளில் பதாகைகளேந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஒவ்வொரு பெயரும் முக்கியம், ஒவ்வொரு வாக்கும் முக்கியம்” மற்றும் “ஜனநாயகப் படுகொலையை நிறுத்துங்கள்” போன்ற வாசகங்கள் அப்பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன.

முன்னதாக, புதனன்று புதுடெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொலிஸார் பலவந்தமாகத் தடுப்புக் காவலில் வைத்ததாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இருப்பினும், பொலிஸ் துறைக்குக் களங்கம் விளைவிப்பதற்காகவே இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக டெல்லி பொலிஸார் மறுத்துள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, “பொறுப்பற்ற மற்றும் அராஜகப் போக்கைக் கொண்ட எதிர்க்கட்சிகளால் இக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இதில் எவ்வித உண்மையோ அல்லது ஆதாரமோ இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளா

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி