உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானம் விபத்து – 08 பேர் உயரிழப்பு!

அமெரிக்க விமானப்படையின் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் குண்டுவீச்சு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டுவீச்சு விமானம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக அமெரிக்க விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கருத்து வெளியளிட்டுள்ள கர்னல் ஜேம்ஸ் ஹேய்ஸ்(James Hayes ), “இன்று, எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளம் ஒரு பயங்கரமான துயரத்தைச் சந்தித்துள்ளது, மேலும் நாம் எட்டு சிறந்த அமெரிக்கர்களை இழந்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த குழுவினரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், அதன் 24 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,