செய்தி

புதிய தாக்குதலுக்கு தயராகும் ரஷ்யா : உளவுத்துறை எச்சரிக்கை

  • September 23, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு புதிய பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உடனான சந்திப்பு குறித்து டெலிகிராமில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவித்த அவர், புதிய வான்வழித் தற்காப்பு அமைப்புகளைப் பெறுவது தொடர்பாக உக்ரைன் தனது நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறினார். “உக்ரைன் மீது ரஷ்யா ஒரு […]

கருத்து & பகுப்பாய்வு

இரட்டை கோபுரத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள்

  • September 11, 2026
  • 0 Comments

நியூயார்க் நகரத்தில் உள்ள இரட்டை உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் மற்றும் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பென்டகன் மீது அல்கொய்தா நடத்திய பயங்கரவாதத் தாக்குதலே உலக வரலாற்றின் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படுகிறது. 9/11 பயங்கரவாதத் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. நான்கு பயணிகள் விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட 9/11 தொடரின் முதல் தாக்குதல், நியூயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் வடக்குக் கோபுரத்தை […]

இலங்கை

தெஹிவளையில் வீடொன்றின்மீது கைக்குண்டு தாக்குதல்

  • September 11, 2026
  • 0 Comments

தெஹிவளை, கவ்தனவில் உள்ள சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை  கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அச்சிறுவர்களின் தந்தை மற்றும் அவர்களது இரு சகோதரர்கள் சிகிச்சைக்காகக் கலுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த இரு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களின் 52 வயதுடைய தந்தை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் […]

ஐரோப்பா

ஜெர்மனியின் சரக்கு விமான மையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் -ரஷ்யா மறுப்பு

  • August 8, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் சரக்கு விமான மையத்தில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் தாக்குதலை பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரகம் மறுத்துள்ளது. இது, ரஷ்யா மீது ஆதாரமின்றி சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மற்றுமொரு உதாரணம் என்று தூதரகம் கூறியுள்ளது. அதேநேரம் ஜெர்மனியில் ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு புதிய அலை குறித்து தூதரகம் தனது கவலையை வெளிப்படுத்தி   அறிக்கையொன்றையும் பகிர்ந்துள்ளது. கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு முக்கியமான பொது சரக்கு மற்றும் நேட்டோ தளவாட மையமான லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில், ட்ரோன் ஒன்று […]

உலகம்

ஈரான் மீது புதிய தாக்குதல் அலை – பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது குறி

  • August 1, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, தெஹ்ரானை சரணடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, கடுமையான இராணுவப் பதிலடி கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், இராஜதந்திர ஈடுபாடுகள் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

அயர்லாந்தில் தாக்குதலுக்கு திட்டம் : வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்துடன் இருவர் கைது

  • July 24, 2026
  • 0 Comments

வட அயர்லாந்துடனான எல்லைக்கு அருகே வெடிகுண்டு நிரம்பிய வாகனத்தை செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் துப்பறிவாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 20 வயது நிரம்பிய பெண் ஒருவரும், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பயணித்த வாகனம்  வெடிபொருள் அகற்றும் குழுவின் உதவியுடன் ஆய்வு உட்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு காரணம் கருதி முடிவுகளை அரசாங்கம் வெளியிடவில்லை. வட […]

உலகம் முக்கிய செய்திகள்

வெள்ளை மாளிகையை தாக்க சதித்திட்டம் : ஐவர் கைது

  • June 17, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை FBI இயக்குனர் காஷ் படேல் (Kash Patel) அறிவித்துள்ளார். ஜூன் 10 அன்று, ஒரு சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து FBI முதன்முதலில் அறிந்ததாகவும், நீதித்துறையில் உள்ள கூட்டாளிகளுடன் இணைந்து விரைவாகச் செயல்பட்டதாகவும் படேல் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் வொஷிங்டன், டி.சி.யில் நடைபெறவிருந்த UFC அமெரிக்கா 250 நிகழ்விலேயே இந்த தாக்குதலை […]

உலகம்

பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீதான தாக்குதல் எதிரொலி – எண்ணெய் விலை உயர்வு!

  • May 28, 2026
  • 0 Comments

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. அதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3.75 சதவீதம் அதிகரித்து, 97.8 டொலராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகி வந்த வேளையில், இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் சூழல் […]

உலகம் செய்தி

மேற்குக் கரையில் இஸ்ரேல் பெரும் தாக்குதல்- ஒருவர் காயம், பலர் கண்ணீர்ப்புகையால் பாதிப்பு

  • May 1, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததுடன், பலர் கண்ணீர்ப்புகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரமல்லாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புர்கா கிராமத்திற்குள் இஸ்ரேலிய படைகள் திடீரென நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் ரப்பர் பூசப்பட்ட உலோகத் தோட்டாக்கள் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் ரப்பர் தோட்டாக்கள் தாக்கியதில் காயமடைந்துள்ளார். மேலும், கிராம மக்கள் பலர் கண்ணீர்ப்புகை […]

உலகம் செய்தி

லெபனானில் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புமைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

  • April 27, 2026
  • 0 Comments

கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும், நாட்டின் தெற்குப் பகுதி முழுவதிலும் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்பு தளங்கள் எனக் கூறப்படும் இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள திப்னின் (Tibnin) மற்றும் யேட்டர் (Yater) நகரங்களையும் இலக்குவைத்து இரண்டு தனித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை என அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் […]