ICC நீதிமன்றம் மீதான தடைகளை அதிகரிக்க அமெரிக்கா பரிசீலனை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. அமெரிக்கர்கள், குறிப்பாக இராணுவத்தினரை விசாரிப்பதற்கும் வழக்குத் தொடர்வதற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகளுக்கு எதிரான தடைகளை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதேபோல் தற்போது பயணத் தடைகள், விசாக்களை ரத்து செய்தல், […]










