ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில் தடம் புரண்டு விபத்து – 20 காயம், இருவர் கவலைக்கிடம்

கிழக்கு சசெக்ஸில் உள்ள லூயிஸ் அருகே, சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்ற சதர்ன் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லண்டன் விக்டோரியாவிலிருந்து Victoria  ஈஸ்ட்போர்ன் Eastbourne நோக்கிச் சென்ற நிலையில் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதில் 20 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் பலத்த காயங்களுடன் வேறொரு சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணத்தை புலனாய்வாளர்கள் கண்டறியும் வரை, ஹேவர்ட்ஸ் ஹீத் Haywards Heath  மற்றும் லூயிஸ்   Lewe இடையேயான ரயில் பாதை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்