இந்தியா செய்தி

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில்

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் சற்று தேக்க நிலையை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்த நேர்மறையான தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜெய்சங்கர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் சில முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். இருநாட்டு வர்த்தக அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுள்ளன.

வரிகள் தொடர்பான மோதல்களைத் தீர்க்கவும், வரி அல்லாத தடைகளை நீக்கவும், இருதரப்பு சந்தை அணுகலை அதிகரிக்கவும் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. எனது கணிப்புப்படி, இந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை விரைவில் சுமுகமான முடிவை எட்டும்” என்றார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவுடன் பரஸ்பரம் பொதுவான நலன்கள் உள்ள துறைகளில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், அதில் எந்தவொரு அடிப்படை மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரும், இருநாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய தீவிரமாக பணியாற்றி வருவதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி