உலகம் செய்தி முக்கிய செய்திகள்

2000 இற்கு மேற்பட்ட பாலஸ்தீன சிறார்கள் இஸ்ரேலில் சிறை வைப்பு

2023 ஒக்டோபர் முதல் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறுவர்களை இஸ்ரேலிய படைகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக பாலஸ்தீன கைதிகள் அமைப்பு (Palestinian Prisoner’s Society) தெரிவித்துள்ளது.

2023 ஒக்டோபர் முதல் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறுவர்களை இஸ்ரேலிய படைகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக பாலஸ்தீன கைதிகள் அமைப்பு (Palestinian Prisoner’s Society) தெரிவித்துள்ளது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், பாலஸ்தீனக் சிறுவர்களை இலக்குவைத்து இஸ்ரேலிய அதிகாரிகள் நடத்தி வரும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது குறைந்தது 350 பாலஸ்தீன சிறுவர்கள் இஸ்ரேலிய சிறைகளில் கடுமையான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள எபிரோன் (Hebron) பகுதியில் இருந்து மட்டும் செவ்வாய்க்கிழமை குறைந்தது ஆறு சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதியில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாலும், கட்டாயக் காணாமல் ஆக்கப்படும் கொள்கை தொடர்வதாலும், காசாவில் கைது செய்யப்பட்ட சிறுவர்களின் துல்லியமான எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

எந்தவொரு குற்றச்சாட்டோ அல்லது விடுதலை திகதியோ இன்றி சிறையில் அடைக்கும் இஸ்ரேலின் இந்தக் கொள்கை, “குழந்தைகளை எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளி, அவர்களின் குடும்ப மற்றும் கல்விச் சூழலைப் பறிக்கும் மற்றொரு கொடூரக் குற்றமாகும்” என்று அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

2023 ஒக்டோபர் இல் போர் தொடங்கியதில் இருந்து, மேற்குக் கரையில் 25,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களையும், காசாவில் ஆயிரக்கணக்கானோரையும் இஸ்ரேலியப் படைகள் கைது செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி