பொழுதுபோக்கு

தக் லைஃப் படத்துல அந்த ஹீரோ கேமியோவா? மோசம் பண்ணிட்டாரே கமல்..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி வரும் மணிரத்னம் மீண்டும் ஜெயம் ரவியை இணைத்துக் கொண்டார்.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த திரிஷா, அருள்மொழிவர்மன் ஆக நடித்த ஜெயம் ரவி, ஓகே கண்மணி படத்தில் நடித்த துல்கர் சல்மான் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

பொன்னியின் செல்வன் படத்தில் லீட் ரோலில் நடித்த ஜெயம் ரவி தக் லைஃப் படத்தில் வெறும் கேமியோ ரோலில் மட்டுமே நடிக்க உள்ளார் என்கிற லேட்டஸ்ட் அப்டேட் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் சில நாட்கள் மட்டுமே ஜெயம் ரவி நடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் தங்கவேல் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

அந்தப் படத்தை முடித்துவிட்டு தனி ஒருவன் 2 படத்திலும் ஜெயம் ரவி நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவி ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரைப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும், பெரிதாக வசூல் ஈட்ட முடியாமல் தவித்து வருகிறது.

மேலும் இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் பிரதர் திரைப்படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content