ஐரோப்பா

போர் மூளும் வரை காத்திருக்க முடியாது : பிரபுக்கள் சபை எச்சரிக்கை

அடுத்து வரும் 1000 நாட்களுக்குள் போரை எதிர்கொள்ள பிரித்தானியா விரைவில் தயாராக வேண்டும் என பிரபுக்கள் சபை எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் இன்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில்,  பிரித்தானியா தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், ஒரு கடுமையான மோதலை எதிர்கொள்ள தனது இராணுவம் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இராணுவ உபகரணங்கள் மற்றும் விநியோகங்களை விரைவாக உருவாக்கவும், தேவையற்ற விதிகளை நீக்கி, பாதுகாப்பு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துமாறும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, வளர்ந்து வரும் சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு பிரித்தானியா தயாராக இருப்பதை உறுதிசெய்யுமாறு பிரதமர் ஆண்டி பர்னமின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்