இலங்கை

நாளுக்கு நாள் பலவீனமடையும் இலங்கை ரூபாயின் பெறுமதி

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 6.9 சதவீதம் சரிவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2026 நவம்பர் 20 அன்று CBSL வெளியிட்ட வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய , ஆண்டின் தொடக்கத்தில் இருந்த மதிப்புடன் ஒப்பிடுகையில், நவம்பர் 20 ஆம் திகதி நிலவரப்படி ரூபாயின் மதிப்பு 6.9 சதவீதம் சரிவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் நவம்பர் 13 ஆம்  திகதி மத்திய வங்கி வெளியிட்டிருந்த தரவுகளில் சரிவு விகிதம் 6.8 ஆக காணப்பட்டிருந்த நிலையில் குறிப்பிட்ட இடைவெளியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இது, ஆண்டின் தொடக்கத்தில் இருந்த மதிப்புடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடைவதைக் குறிக்கிறது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்