இந்தோனேசியாவில் தொழிற்சாலையொன்றில் தீவிபத்து – 36 பேர் மாயம், மீட்பு நடவடிக்கையில் சிக்கல்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தொழிற்சாலையொன்றில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 36 பேர் காணாமல்போயுள்ளதாக மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.
தலைநகரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள செராங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஃபோனுசா அகுங் முலியா Fonusa Agung Mulia என்ற மிட்டாய் தொழிற்சாலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று ஆரம்பமாகிய தீ தற்போது வரை தொடர்ந்து எரிவதாகவும் இதனால் மீட்பு பணிகள் சிக்கலாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




