இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கை வருகிறார் ரஷ்யா சட்டமா அதிபர்: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

ரஷ்யாவின் சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சான் (Aleksandr Gutsan), அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ரஷ்யா சட்டமா அதிபர்

ரஷ்யாவின் சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சான் (Aleksandr Gutsan), அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கை சட்டமா அதிபரின் அழைப்பின் பிரகாரமே அவர் கொழும்பு வருகிறார் என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கொழும்பு 12 ஹல்ப்ட்ஸ்டொப் பகுதியில் உள்ள சட்டமா அதிபர் பணியகத்தில் , இலங்கை சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவைச் சந்திக்க ரஷ்ய சட்டமா அதிபர் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலஞ்சம் அல்லது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளையும் சந்தித்து, வழக்குத் தொடருதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார். எனினும், இந்த சந்திப்புகள் நடைபெறவுள்ள இடம் இதுவரை வெளியிடப்படவில்லை.

ரஷ்ய சட்டமா அதிபரின் விஜயத்திற்கு முன்னதாக இலங்கை வந்திருந்த பாதுகாப்புக் குழுவினர், அவர் சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனி விமானம் மூலம் இலங்கைக்கு வரவுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை