Consent Preferences
ஐரோப்பா

பயங்கரவாத குற்றச்சாட்டு – சுவீடன் பிரஜை ரஷ்யாவில் கைது

சுவீடன் நாட்டு பிரஜை ஒருவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய இராணுவத்தில் சேரும் சாக்கில் ரஷ்யாவிற்குள் நுழைந்த அவர் அங்கு உக்ரைன் சார்பாகத் தாக்குதல்கள் மற்றும் நாசவேலைகளைத் திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அவர் மீது சட்டவிரோதமாக எல்லையை கடந்த குற்றச்சாட்டு மற்றும்  பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றும் FSB கூறியது.

ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த ஃப்ரெடி லிண்ட்ஹோம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர், FPV (முதல்-நபர் பார்வை) ட்ரோன்களைப் பயன்படுத்தி “பயங்கரவாதத் தாக்குதல்கள்” மற்றும் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவிற்கு வந்ததாக ஒப்பதல் அளிக்கும் காணொளி ஒன்றையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்