இலங்கை செய்தி

ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்ட பிக்குகள்: கொழும்பில் பதற்றம்

“ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் எமக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைப் பெறுவோம்.

“ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் எமக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைப் பெறுவோம்.

இங்கிருந்து எமது போராட்டம் தொடரும். ஞானசார தேரர் மற்றும் பௌத்த சாசனத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயார்.”

இவ்வாறு உலப்பனே சுமங்கல தேரர் சூளுரைத்துள்ளார்.

ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்பாக திரண்டுள்ள பிக்குகள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி மகாசங்கத்தினரால் கடந்த 10 ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரத்துக்கான நடைபயணம் இன்று கொழும்பை வந்தடைந்தது.

ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்பாக வந்த பிக்குகள், ஞானசார தேரரின் விடுதலை உள்ளிட்ட தமது கோரிக்கைகளை ஜனாதிபதி செயலரிடம் முன்வைத்தனர்.

சாதகமான தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம், ஜனாதிபதி செயலகம் முன்பிருந்து செல்ல மாட்டோம் எனவும் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு தடுப்பணைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்பாக வந்த ஜனாதிபதி செயலாளர், பிக்குகளுடன் பேச்சு நடத்தினார். எனினும், சாதகமான தீர்வு கிடைக்கும்வரை விடைபெற போவதில்லை என பிக்குகள் அறிவித்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை