உலகம்

தொலைத்தொடர்பு இணைப்புத் துண்டிப்பு – அமெரிக்காவில் விமான சேவைகள் இரத்து

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை விமான நிலையங்களில் இருந்து புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுமான பணியின் போது ஏற்பட்ட தொலைத்தொடர்பு இணைப்புத் துண்டிப்பு காரணமாக, இந்நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“நியூ ஜெர்சியில் ஆம்ட்ராக் கட்டுமான பணியாளர்கள் தவறுதலாக ஒரு ஃபைபர் இணைப்பை வெட்டியதால், இந்நிலை ஏற்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளத.

FlightAware-இன் தகவல்படி, சுமார் 1900 GMT மணியளவில், நியூயார்க் நகரப் பகுதியின் முக்கிய மையமான நெவார்க் விமான நிலையத்தில் 168 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும்,  97 விமானங்கள் தாமதமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிலடெல்பியாவில் 63 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 189 விமானங்கள் தாமதமாகின.

எவ்வாறாயினும் பிற்பகலுக்குள் முதன்மை அமைப்பு சீரமைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்ப்பதாகவும், ஆனால் மாற்று மின் இணைப்பைச் சரிசெய்ய 13 மணி நேரம் தேவைப்படும் எனவும் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்