எதிரிகளை நிர்மூலமாக்கும் நேரடித் தாக்குதல் பயிற்சி: வடகொரியா அதிரடி
சனிக்கிழமையன்று தாங்கள் மேற்கொண்ட பல ஏவுகணைச் சோதனைகள், நீண்டதூரம் சென்று தாக்கும் பீரங்கிகள் மற்றும் ஏவுகணைப் பிரிவுகள் பங்கேற்ற நேரடித் தாக்குதல் பயிற்சியின் ஓர் அங்கம் என வடகொரியா திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டு அரச ஊடகமான KCNA உறுதிப்படுத்தியுள்ளது. ஐந்து ராணுவப் பிரிவுகள் பங்கேற்ற இந்த கூட்டுத் தாக்குதல் பயிற்சியின்போது, தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள், தந்திரோபாய க்ரூஸ் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பெரிய அளவிலான பல்குழல் ஏவுகணைச் செலுத்தியான ‘ராக்கெட் லாஞ்சர்கள்’ உள்ளிட்ட பல்வேறு […]













