புலிகளின் கதையை முடித்த மஹிந்தவே சிறந்த தலைவர் – மார்தட்டும் தேரர்
“பிரபாகரனின் கதையை முடித்து 30 கால போரை மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டுவந்ததாலேயே இன்று வடக்கிலும் தெற்கிலும் கூட்டங்களை நடத்த முடிகின்றது. மகிந்த ராஜபக்ச ஒரு சிறந்த தலைவர்” என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அனுராதபுரத்தில் நடத்திய கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சஜித், ரணில், நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. எதிரணியின் கூட்டம் என்றால் எதிரணிக் தலைவர்கள் அனைவரையும் அழைத்திருக்க வேண்டும்.
அனுராதபுரம் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றது நல்லவிடயம். அவரை மக்கள் இன்றும் நேசிக்கின்றனர். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான புலிகளின் போரை மகிந்த முடிவுக்குக் கொண்டுவந்ததால்தான், இன்று ஆளுங்கட்சியால் கூட சுதந்திரமாகக் கூட்டங்களை நடத்த முடிகின்றது.
இவ்வாறு பாதுகாக்கப்பட்ட இந்த நாட்டை, சமஷ்டி முறையை நோக்கி நகர்த்துவதற்குத் தற்போது முயற்சிக்கின்றனர்” என்று பத்தரமுல்ல சீலரத்தன தேரர்
தெரிவித்தார்.




