இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: ஐ.நா. விசாரணைகோரி யாழில் பேரணி

செம்மணி புதைகுழி: ஐ.நா. விசாரணைகோரி யாழில் பேரணி

யாழ். செம்மணி மனிதப் படுகொலை தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுகின்றது.

அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமானது என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இந்தப் பேரணியும் அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டுள்ளன.

நல்லூர் கைலாச பிள்ளையார் கோயில் அருகாமையில் ஆரம்பமான இந்தப் பேரணி, கிட்டு பூங்கா பகுதியைச் சென்றடைந்து நிறைவடைந்ததுடன், அங்கு விசேட பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.

இந்தப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, பொ.ஐங்கரநேசன் உள்ளிட்ட பல முக்கிய கட்சிப் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை