சிறைச்சாலை சம்பவத்தால் GSP+ வரிச்சலுகைக்கு ஆபத்தா? அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை சம்பவத்தால் GSP+ வரிச்சலுகைக்கு ஆபத்தா?

  • July 8, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் சர்வதேசம்வரை சென்றுவிட்டது. எனவே, முறையான விசாரணை இடம்பெறாவிட்டால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைகூட இல்லாமல்போகக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கூட்டு எதிரணிகள் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியவை வருமாறு , “நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளித்து, அமைச்சு பதவியில் இருந்து விலகுமாறு ஹர்ஷன நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கின்றோம். இப்படியான அரசியல் கலாசாரத்தையே தேசிய […]

அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகம் செய்தி

ஈரான்மீதான தடைகள் மீண்டும் அமுல்

  • July 8, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இதற்கான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா செவ்வாய்க்கிழமை மீண்டும் அமுல்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் விற்பனைக்கு […]

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்திவருகின்றன. செய்தி விளையாட்டு

காலிறுதிக்குள் நுழைந்த அணிகள் எவை?

  • July 8, 2026
  • 0 Comments

  பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்திவருகின்றன. இதில் 48 அணிகள் பங்கேற்று முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின. ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 12 பிரிவுகளாக இந்த சுற்று நடைபெற்றது. இதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3-வது இடத்தை […]

முன்னாள் அமைச்சரான ஜகத் புஷ்பகுமார , ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

தொடரும் கைது வேட்டை – முன்னாள் அமைச்சரும் சிக்கினார்

  • July 8, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சரான ஜகத் புஷ்பகுமார , ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (08) காலை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் கொள்முதல் நடைமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

"நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியில் இப்படி நடந்திருக்கவே கூடாது: அமைச்சர் ஆதங்கம்

  • July 8, 2026
  • 0 Comments

“நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு: “நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவமானது சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். வறுமை எங்கு அதிகமாக உள்ளதோ, அங்கு கல்வி பின்தங்கியிருக்கும். இவ்வாறு வறுமையும் கல்வியறிவும் பின்தங்கியுள்ள […]

செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவிற்கு வருகை தந்த ட்ரம்ப், இம்மாநாட்டை நடத்துகின்ற துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகனுடனான தனது நட்பு மட்டும் இல்லையென்றால், தான் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணித்திருக்கக்கூடும் என்று கூறினார். ஐரோப்பா செய்தி

நேட்டோவிலிருந்து வெளியேறுமா அமெரிக்கா?

  • July 8, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் போர் மற்றும் கிரீன்லாந்து (Greenland) விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேட்டோ ராணுவக் கூட்டணியில் அமெரிக்கா தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்யுமாறு ட்ரம்பை சமாதானப்படுத்த ஐரோப்பிய தலைவர்கள் முயன்று வருகின்றனர். செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவிற்கு வருகை தந்த ட்ரம்ப், இம்மாநாட்டை நடத்துகின்ற துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகனுடனான தனது நட்பு மட்டும் இல்லையென்றால், தான் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணித்திருக்கக்கூடும் என்று கூறினார். […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்துக்கு பின்னால் சூழ்ச்சி?

  • July 8, 2026
  • 0 Comments

அரசியல் தேவைக்காகவே அன்று சிறைச்சாலைக்குள் குட்டிமணி படுகொலை செய்யப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலைச் சம்பவத்திலும் அரசியல் பின்புலம் இருந்தது. எனினும், நீர்கொழும்பு சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியின் நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனவே, இச்சம்பவம் அதற்குப் பதிலடியாக அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் […]

பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இவ்விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இலங்கை செய்தி

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு வீதி திறப்பு

  • July 8, 2026
  • 0 Comments

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இவ்விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை […]

நீர்கொழும்பிலிருந்து யாழ்.சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றம் இலங்கை செய்தி

நீர்கொழும்பிலிருந்து யாழ்.சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றம்

  • July 8, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் பலத்த பாதுகாப்புடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில், சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளமையுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் துரதிர்ஷ்டவசமான கோரச் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதும் இன்னும் தணியாத பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், […]

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க தலையீட்டை ஏற்க முடியாது: ஈரான் திட்டவட்டம்

  • July 8, 2026
  • 0 Comments

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஒரு நேரடி ஆக்கிரமிப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரான், இதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக, உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் தலையீட்டைத் தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று ஈரான் ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் ஈரானால் தீர்மானிக்கப்படும் […]