காலிறுதிக்குள் நுழைந்த அணிகள் எவை?
பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்திவருகின்றன.
இதில் 48 அணிகள் பங்கேற்று முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின.
ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 12 பிரிவுகளாக இந்த சுற்று நடைபெற்றது.
இதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடித்த சிறந்த 8 அணிகளும் நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’-க்கு முன்னேறின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த சுற்றில் நெதர்லாந்து, ஜெர்மனி, குரோஷியா உட்பட 16 அணிகள் வெளியேறின. தொடர்ந்து ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.
இதில் கனடா, பராகுவே, அமெரிக்கா, பிரேசில், போர்ச்சுகல், மெக்சிகோ, கொலம்பியா, எகிப்து உள்ளிட்ட அணிகள் வெளியேறின.
இந்த தொடரை நடத்தும் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என எந்தவொரு அணியும் காலிறுதிக்கு முன்னேறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பிரான்ஸ், மொராக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், நோர்வே, இங்கிலாந்து, அர்ஜெண்டினா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
காலிறுதி ஆட்டங்களின் விபரம்
பிரான்ஸ் vs மொராக்கோ – ஜூலை 10
ஸ்பெயின் vs ள பெல்ஜியம் – ஜூலை 11
நோர்வே vs இங்கிலாந்து – ஜூலை 12
அர்ஜெண்டினா vs சுவிட்சர்லாந்து – 12




