அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை சம்பவத்தால் GSP+ வரிச்சலுகைக்கு ஆபத்தா?

சிறைச்சாலை சம்பவத்தால் GSP+ வரிச்சலுகைக்கு ஆபத்தா?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் சர்வதேசம்வரை சென்றுவிட்டது. எனவே, முறையான விசாரணை இடம்பெறாவிட்டால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைகூட இல்லாமல்போகக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கூட்டு எதிரணிகள் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியவை வருமாறு ,

“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளித்து, அமைச்சு பதவியில் இருந்து விலகுமாறு ஹர்ஷன நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கின்றோம். இப்படியான அரசியல் கலாசாரத்தையே தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தி இருந்தது.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இன்று சர்வதேசம்வரை சென்றுள்ளது. மனித உரிமைப் பிரச்சினையாக மாறியுள்ளது.

எனவே, சம்பவத்துக்கு முழுப்பொறுப்பையும் ஏற்று, அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும்.இதுவிடயத்தில் தமக்குள்ள பொறுப்பை அரசாங்கம் கைவிட்டுவிடமுடியாது.” -என்றார் தயாசிறி ஜயசேகர.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை