தொடரும் கைது வேட்டை – முன்னாள் அமைச்சரும் சிக்கினார்
முன்னாள் அமைச்சரான ஜகத் புஷ்பகுமார , ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று
கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (08) காலை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் கொள்முதல் நடைமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




