மாலைதீவு ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமோகமாக வரவேற்றார். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, […]













