இந்தியா செய்தி தமிழ்நாடு

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அலை! முடிவுக்கு வருகிறது மம்தா ஆட்சி!!

  • May 4, 2026
  • 0 Comments

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி 181 வெற்றி நடைபோட்டுவருகின்றது. திரிணமூல் காங்கிரஸ் 89 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் திகதியும் நடைபெற்றன. இரண்டாம் கட்டத் தேரத்லில் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பால்டா தொகுதிக்கு வரும் 21ம் திகதி […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

த.வெ.க. தொண்டர்கள் கொண்டாட்டம்! சொந்த தொகுதியில் ஸ்டாலின் திண்டாட்டம்!!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகம் மற்றும் விஜய்யின் வீட்டுக்கு முன்னால் ஆதரவாளர்கள் திரண்டு, வெற்றிக் கோஷம் எழுப்பிவருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தைபெறும் என கட்சி தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. 65 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கின்றார். தமிழக சட்டப்பேரவைத் […]

உலகம் செய்தி

ஆஸ்ரேலியா, ஜப்பானுக்கிடையில் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

  • May 4, 2026
  • 0 Comments

மேற்காசியாவில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் புதிய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் எரிசக்தி, உணவு பாதுகாப்பு மற்றும் முக்கியமான தாதுக்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் Takaichi Sanae  இன்று பிரதமர்  Anthony Albanese  ஐ சந்தித்து பேச்சு நடத்தினார். இதனையடுத்தே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், […]

உலகம் செய்தி

பாகிஸ்தானின் அமைதி முயற்சி தொடரும்!

  • May 4, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் பாகிஸ்தானின் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மோதல்களைத் தீர்க்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான சமாதான முயற்சிகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்தது. பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து தனது தூதரகப் பணிகளை முன்னெடுக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் 2ஆம் சுற்று அமைதி பேச்சை […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது தி.மு.க.: நாம் தமிழர் கட்சிக்கும் பின்னடைவு!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. ஆளுங்கட்சியான தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் அமைச்சர்கள் பலரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக […]

உலகம் செய்தி

ஈரான் ட்ரோன்களை அழிக்க UAE இற்கு ‘Iron Beam’ வழங்கியது இஸ்ரேல்!

  • May 4, 2026
  • 0 Comments

ஈரானின் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள, இஸ்ரேல் புதிதாக உருவாக்கிய ‘அயர்ன் பீம்’ ‘Iron Beam என்ற ஆயுதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆயுதத்தில் உள்ள லேசர் கற்றைகள், ஈரான் ட்ரோன்களை நடுவானிலேயே சாம்பலாக்கிவிடும் வல்லமை கொண்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல ‘ஸ்பெக்ட் ரா’ என்ற கண்காணிப்பு கருவியையும் அமீரகத்துக்கு இஸ்ரேல் வழங்கியுள்ளது. இது ஈரானின் ட்ரோன்கள் 20 கி.மீ தூரத்துக்கு அப்பால் வரும்போதே எச்சரிக்கை விடுக்கும். இதன் மூலம் அயர்ன் பீம் ஆயுதங்களை பயன்படுத்தி […]

இலங்கை செய்தி

தையிட்டி பிரச்சினையை நிதானமாகவே கையாள்வோம்: ஆளுங்கட்சி எம்.பி.

  • May 4, 2026
  • 0 Comments

” தையிட்டி விகாரைப் பிரச்சினையை நிதானமாகவே கையாள வேண்டும். தென்பகுதியில் இருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கு புது இரத்தத்தை பாய்ச்சுவதாக இந்தப் பிரச்சினை அமைந்து விடக்கூடாது.”- என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார். தையிட்டி பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழவுள்ள காணிகளை விடுவிக்கும் முகமாக மூன்று அமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. […]

ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் நெருக்கடி மோசமடையும்: ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை!

  • May 4, 2026
  • 0 Comments

எரிபொருள் நெருக்கடி இன்னும் மோசமடையக்கூடும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எரிபொருள் வரிச் சலுகையை நீட்டிப்பது குறித்த உறுதியான வாக்குறுதியை அளிக்க மறுத்துள்ளார். வரவிருக்கும் கூட்டாட்சி வரவுசெலவுத் திட்டத்தில் நேரடி எரிபொருள் நிவாரணத்திற்குப் பதிலாக, தலைமுறை சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் மூலதன ஆதாய வரி மற்றும் சொத்து வரி மாற்றங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது. இந்த வரிச் சீர்திருத்தங்கள் எதிர்கால சந்ததியினருக்கு உதவும் என்று ஆளுங்கட்சி வாதிட்டாலும், இது தேர்தலின் […]

செய்தி விளையாட்டு

பஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத்!

  • May 4, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 46 – வது லீக் ஆட்டத்தில குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஆரம்பம் முதலே பஞ்சாப் Punjab Kings துடுப்பாட்வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ப்ரப்சிம்ரன், கூப்பர் கோனலி ஆகியோர் ஒரு ஓட்டம் கூட பெறாமல் வெளியேறினர். சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 57 […]

அரசியல் இந்தியா செய்தி

தமிழகத்தை ஆளப்போவது யார்? இன்று கிடைக்கும் விடை!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற வினாவுக்கு இன்று விடை கிடைக்கப்பெறவுள்ளது. வாக்கெண்ணும் நடவடிக்கை இந்திய நேரப்படி இன்று (4) காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முற்பகல் 11 மணி […]