இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கை எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் சீனத் தூதுவர்

  • July 28, 2026
  • 0 Comments

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து, எதிர்வரும் 31-ஆம் திகதி நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பில், தூதுவர் கீ சென்ஹொங் தமது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர […]

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார்.  உலகம் செய்தி

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டர்ம்ப்

  • July 28, 2026
  • 0 Comments

ஈரானுடன் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்நாட்டின் பிக்ஏக்ஸ் மலை (Pickaxe Mountain) பகுதியையும், பாலங்கள் உள்ளிட்ட பிற உள்கட்டமைப்புகளையும் இலக்கு வைக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். இது குறித்து Fox News ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். “பிக்ஏக்ஸ் மலைப் பகுதி என்பது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையல்ல. ஈரான் விவகாரத்தில் தற்போது நாங்கள் வலுவான நிலையில் இருக்கிறோம். ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில், கடந்த ஐந்து மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்தேமே மொஹஜேரானி (Fatemeh Mohajerani) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரானில் 350 அரசாங்க ஊழியர்கள் பலி

  • July 28, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில், கடந்த ஐந்து மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்தேமே மொஹஜேரானி (Fatemeh Mohajerani) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “தியாகிகளின் குடும்பங்களைச் சந்திக்கும் இந்த வேளையில், மக்களுக்கான சேவையில் ஈடுபட்டிருந்த 350-க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் உயிர்த்தியாகம் அடைந்துள்ளனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். ஹோர்மோஸ்கான் (Hormozgan) பகுதியில் மக்களின் தொடர்பாடல் சேவைகளைத் தடையின்றி வழங்க […]

இலங்கை செய்தி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும்: சுமந்திரன் வலியுறுத்து

  • July 28, 2026
  • 0 Comments

“நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசமைப்புத் திருத்தத்தை இந்த நேரத்தில் கொண்டு வந்து செய்ய நினைப்பது நிச்சயமாக நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைக்கும் ஒரு விடயமாக நாங்கள் காண்கின்றோம்.” என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் நடவடிக்கையை ஆட்சேபித்து கொழும்பில் நேற்று திங்கட்கிழமை மூத்த சட்டத்தரணிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “நீதியரசர்களின் […]

அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து புஷெர் (Bushehr) விமான நிலையம் செயலிழந்துவிட்டது என்று ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்க தாக்குதலால் ஈரானில் செயலிழந்த முக்கிய விமான நிலையம்

  • July 28, 2026
  • 0 Comments

அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து புஷெர் (Bushehr) விமான நிலையம் செயலிழந்துவிட்டது என்று ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இந்த விமான நிலையம் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். “மக்களின் பயன்பாட்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டு வாங்கப்பட்ட ஒரு விமானத்தின் எஞ்சிய பகுதிகளை நாங்கள் பார்த்தோம். நேரடியாகத் தாக்கிய ஏவுகணையால் அது முற்றிலும் அழிக்கப்பட்டு, அதன் வால் பகுதி மட்டுமே சேதமின்றி எஞ்சியுள்ளது” […]

எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் (1.47 கோடி) பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் 1.87 கோடி பாலோயர்களுடன் முன்னிலை பெற்றுள்ளார். இந்தியா செய்தி

ராகுல் காந்தியை முந்தினார் விஜய்

  • July 28, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் (1.47 கோடி) பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் 1.87 கோடி பாலோயர்களுடன் முன்னிலை பெற்றுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களின்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும் வீடியோக்களும் லட்சக்கணக்கில் வைரலாகின. இதன் மூலம் இளைஞர்களைச் சென்றடைய டிஜிட்டல் ஊடகங்களே மிகச் சிறந்த வழி என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் […]

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிஹார் மற்றும் அசாம் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்தியா செய்தி

நீட் தேர்வுப் போராட்டம்: வழக்குகள் வாபஸ்

  • July 28, 2026
  • 0 Comments

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிஹார் மற்றும் அசாம் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. நீட் வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஜூலை 25 அன்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும், […]

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கிலான , கடலோர ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT) யின் 6வது கட்டத்தை அமெரிக்காவும் இலங்கையும் தொடங்கியுள்ளன. இலங்கை செய்தி

இலங்கை, அமெரிக்க படைகளின் கூட்டு பயிற்சி திருமலையில் ஆரம்பம்

  • July 28, 2026
  • 0 Comments

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கிலான , கடலோர ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT) யின் 6வது கட்டத்தை அமெரிக்காவும் இலங்கையும் தொடங்கியுள்ளன. திருகோணமலை மற்றும் கொழும்பில் ஜூலை 27 முதல் 31 ஆம் திகதி வரை இலங்கை கடற்படையால் நடத்தப்படும் “CARAT ஸ்ரீலங்கா 2026” பயிற்சி, இரு நாடுகளின் படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பையும் நம்பிக்கையையும் மேம்படுத்தும் நோக்கில், முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஒரு வார கால தரை […]

Samagi Jana Balasakaya MP sentenced to one and a half years in prison இலங்கை செய்தி

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கு ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை

  • July 28, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சமிந்த விஜேசிறி தொடர்பான வழக்கு இன்று (28) பதுளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பதுளை மேல்நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த […]

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடியுள்ளன. இலங்கை செய்தி

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கொழும்பில் ஆராய்வு

  • July 28, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடியுள்ளன. தொழில்அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி […]