உலகம் செய்தி

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டர்ம்ப்

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார். 

ஈரானுடன் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்நாட்டின் பிக்ஏக்ஸ் மலை (Pickaxe Mountain) பகுதியையும், பாலங்கள் உள்ளிட்ட பிற உள்கட்டமைப்புகளையும் இலக்கு வைக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து Fox News ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“பிக்ஏக்ஸ் மலைப் பகுதி என்பது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையல்ல. ஈரான் விவகாரத்தில் தற்போது நாங்கள் வலுவான நிலையில் இருக்கிறோம்.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்கவே நாம் விரும்புகின்றோம்.எனினும், ஈரான் எல்லைமீறி செயற்பட்டால் தாக்க நேரிடும்.” என ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி