இலங்கை செய்தி

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கு ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை

Samagi Jana Balasakaya MP sentenced to one and a half years in prison

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சமிந்த விஜேசிறி தொடர்பான வழக்கு இன்று (28) பதுளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பதுளை மேல்நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று (28) தீர்ப்பளித்தது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை