சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது தடவையாகவும் கூடியது. சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், கடற்கரையைப் பாதுகாத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டது. குழு, இதுவரை மேற்கொண்ட களப் பரிசோதனைகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. கிழக்கு மாகாண கடற்கரைகளில் உள்ள […]













