இலங்கை செய்தி

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிர்வாக ஒப்பந்தம் குறித்து இணக்கம்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, 'கூட்டு முகாமைத்துவக் குழு' கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது.

இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா மற்றும் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையானது பதவி வழி உறுப்பினர்கள் 3 பேரும், துறைசார் உறுப்பினர்கள் 4 பேருமாக மொத்தம் 7 பேர் கொண்டதாக அமைக்கப்படுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இக்கூட்டத்தில் பதவி வழி உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாகாண உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் (மாகாண சபை இல்லாத சந்தர்ப்பத்தில் ஆளுநர்), புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், யாழ். மாநகர சபையின் மேயர், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகிய 4 பதவி வழி உறுப்பினர்களும், துறை ரீதியான 5 உறுப்பினர்களுமாக மொத்தம் 9 பேர் இச்சபைக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

துறைரீதியாக 5 பேரையும் பெயர் குறித்து நியமிப்பதற்கும் யாழ். மாநகர சபை உட்பட அனைத்துத் தரப்புக்களும் இக்கூட்டத்தில் இணக்கம் தெரிவித்தன.

மேலும், யாழ். மாநகர சபையால் சுட்டிக்காட்டப்பட்ட, ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த நம்பிக்கை நிதியப் பொறுப்பு உடன்படிக்கையிலுள்ள 12ஆவது சரத்தை நீக்குவதற்கும் அனைத்துத் தரப்புக்களும் இணக்கம் வெளியிட்டன.

இந்தச் சுமுகமான இணக்கப்பாடுகளையடுத்து, திருத்தப்பட்ட உடன்படிக்கையில் அனைத்துத் தரப்புக்களும் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடுவதற்கான திகதியை மிக விரைவில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை