ஈரான் போர்க்கப்பலை நாங்களே மூழ்கடித்தோம்: அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலிலேயே ஈரான் போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இலங்கை தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள பகுதியில் வைத்தே (இந்து சமுத்திரத்தில்) இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஈரான் கப்பல் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானது. போர்க் கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளானதை என்ற தகவலை மட்டுமே வெளியிட்ட இலங்கை கடற்படை, தாக்குதலுக்கு இலக்கானதா என்பது பற்றி உறுதியாக கூறவில்லை. விசாரணைகளின் பின்னரே அது பற்றி தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. […]











