வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயயகனிடம் விரிவாகக் கேட்டறிந்தனர். இலங்கை செய்தி

வடக்குக்கான முதலீட்டு வாய்ப்பு குறித்து IMF குழு ஆராய்வு

  • September 13, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயயகனிடம் விரிவாகக் கேட்டறிந்தனர். இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள IMF குழுவினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (12.09.2026) சனிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியப் […]

" தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. தவறிழைத்தவர்களும், ஊழல்களில் ஈடுபட்டவர்களுமே சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, போலி கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மகனுக்காக மேடையேறிய மஹிந்தவுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய சாட்டையடி

  • September 12, 2026
  • 0 Comments

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. தவறிழைத்தவர்களும், ஊழல்களில் ஈடுபட்டவர்களுமே சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, போலி கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை சரிவர செய்யும். இது விடயத்தில் எவருக்கும் மன்னிப்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார். பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “பாதாள குழுக்களுக்கு […]

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் புதிய வரலாறு படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்

  • September 12, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் புதிய வரலாறு படைத்துள்ளார். எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் தனது 69-வது டெஸ்ட் அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் 68 அரைசதங்களுடன் முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை முந்தி, டெஸ்ட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அநுராதபுரத்தில் இன்று (12) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார். அரசியல் இலங்கை செய்தி

தள்ளாடும் வயதிலும் மகனுக்காக களமிறங்கிய தந்தை

  • September 12, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அநுராதபுரத்தில் இன்று (12) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார். தள்ளாடியபடியே பாதுகாவலர்களின் உதவியுடன் மேடையேறிய மஹிந்த ராஜபக்ச, கதிரையில் அமரவைக்கப்பட்டார். அவர் உரையாற்றவில்லை. நாமல் ராஜபக்ச தலைமையிலேயே இக்கூட்டம் நடைபெற இருந்தது. எனினும், அவர் நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டதால் அவர் சார்பிலேயே மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.

செங்கடல் பகுதியில் யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராகப் போரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ராணுவ உதவியைக் கோரியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் செய்தி

ஹவுதி அமைப்புக்கு எதிராக போரிட அமெரிக்காவுக்கு சவுதி அழைப்பு

  • September 12, 2026
  • 0 Comments

செங்கடல் பகுதியில் யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராகப் போரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ராணுவ உதவியைக் கோரியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை சவுதி தலைவருடன் டிரம்ப் குறைந்தது இரண்டு முறை தொலைபேசியில் பேசிய போதிலும், ஹவுதிக்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உளவுத்துறைத் தகவல்களைப் […]

டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், மத்திய கிழக்கு மோதலில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அமைதியை ஏற்படுத்தும் அமைப்பாக (Peacemaker) செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியா உலகம் செய்தி

அடுத்த பிரிக்ஸ் மாநாடு சீனாவில்

  • September 12, 2026
  • 0 Comments

டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், மத்திய கிழக்கு மோதலில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அமைதியை ஏற்படுத்தும் அமைப்பாக (Peacemaker) செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தற்போதைய போர்ச் சூழல் “சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு உகந்தது அல்ல” என்பதால், இந்த விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் சீனா பிற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்றுஜனாதிபதி ஷி ஜின்பிங் கூறியதாகச் சீன அரசு ஊடகமான CCTV செய்தி […]

சவுதி அரேபியாவின் மிகமுக்கியமான எண்ணெய் விநியோகக் குழாய் மீதான தாக்குதலுக்கு ஈரான்தான் காரணமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "அநேகமாக அவர்கள்தான் காரணமாக இருக்கக்கூடும்" என்று தெரிவித்தார். உலகம் செய்தி

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர்: ட்ரம்ப் தகவல்

  • September 12, 2026
  • 0 Comments

சவுதி அரேபியாவின் மிகமுக்கியமான எண்ணெய் விநியோகக் குழாய் மீதான தாக்குதலுக்கு ஈரான்தான் காரணமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “அநேகமாக அவர்கள்தான் காரணமாக இருக்கக்கூடும்” என்று தெரிவித்தார். டப்ளினில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் “எங்களைத் தொடர்புகொண்டனர். அவர்கள் எங்களுடன் போரிட விரும்பவில்லை; அதை எங்களிடம் தெளிவாகத் தெரிவித்துவிட்டார்கள்” எனவும் டிரம்ப் கூறினார். “நாங்கள் இதில் ஈடுபடுவதை அவர்கள் நிச்சயமாக விரும்பவில்லை. அத்துடன் பெரும்பாலான […]

பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சனிக்கிழமை இந்தியத் தலைநகர் டெல்லி வந்தடைந்தார். இந்தியா செய்தி

டெல்லி வந்த சீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு

  • September 12, 2026
  • 0 Comments

பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சனிக்கிழமை இந்தியத் தலைநகர் டெல்லி வந்தடைந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு இரு நாடுகளின் எல்லைப் பகுதியான இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட ராணுவ மோதலில் 20 இந்திய வீரர்களும் 4 சீன வீரர்களும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி ஷி ஜின்பிங் மேற்கொண்டுள்ள […]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

வடகிழக்கில் தேர்தலை நடத்துவதில் இந்தியா தீவிரம்: விமலின் கட்சி குற்றச்சாட்டு

  • September 12, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இலங்கை அந்நாடுகளின் காலனியாக மாற்றப்பட்டு வருகின்றது. அவர்களின் தேவைக்கேற்பச் செயல்படும் அரசாங்கமே இங்கு ஆட்சியில் உள்ளது. இதன் காரணமாகவே, இலங்கையுடன் […]

பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியனான இலங்கை அணி, மகளிர் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. செய்தி விளையாட்டு

இறுதிப்போட்டி நாளை: இலங்கை, இந்தியா மோதல்

  • September 12, 2026
  • 0 Comments

பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியனான இலங்கை அணி, மகளிர் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை அணி மீண்டும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாளை (13) ஞாயிறுக்கிழமை நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 7 ஓவர்களுக்குள் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கடும் நெருக்கடிக்கு […]